முதல் முத்தம்
சிறுகதை
நவீன் செல்வகுமார்
இன்று(சனி)..
தனது PULSAR150ஐ, அதிகமான கார்கள் மற்றும் சில ரேஸ் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்த பார்க்கிங்கில் ஒருவழியாக கிடைத்த சிறு இடத்தில நிறுத்தினான். அன்பு தன்னுடன் அலுவலுகத்தில் பணிபுரியும் அமித்தின் ‘BACHELOR PARTY’க்கு வந்திருந்தான்.இரவு எட்டு மணிக்கு வரவேண்டிய அமித்தின் 'BEACHHOUSE'க்கு 8.20க்கு வந்தடைந்தான். அமித்தின் BEACHHOUSEஐ சில வினாடிகள் ஏக்கமாய் பார்த்துவிட்டு வீட்டினுள்ளே நுழைந்தான்.செல்வராகவன் திரைப்படங்களில் வருவதுபோல் சிவப்பு பச்சை மஞ்சள் என வண்ண விளக்குகள் மின்ன ஆங்கில ராக் பாடல்களுடன் வெளியில் இருந்து பார்த்த அமைதிக்கு நேர் மாறாக அந்த அறை இருந்தது.அறை முழுவதும் மது வாசம் வீசியது. குறைந்த ஆடைகளுடன் பெண்களும் ஆண்களும் மதுகுவளைகளை கையில் ஏந்தியபடி ஆடிக்கொண்டிருந்தார்கள்.சிலர் தெய்வநிலை அடைந்த நிம்மதியில் சோபாவிழும் தரையிலும் கிடந்தார்கள்.அமித் அன்புவை வரவேற்று மது பாட்டிலை குடுத்து உபசரித்தான்.அன்பு அதை மறுத்துவிட்டு ஒரு மூலையில் போய் அமர்ந்தான்.அன்புவிற்கு மது பிடிக்காது.மது போதைக்காக இங்கு அவன் வரவில்லை, மாது போதைக்காக அவன் வந்திருந்தான்.
அவனுடன் அலுவலகத்தில் பணிபுரியும் உலகப்பேரழகியாக அவன் கருதும் இஸபெல்லேவும் இங்கு அவனை வரசொல்லியிருந்தாள்.அறையில் நுழைந்ததில் இருந்து அவன் கண்கள் அவளையே தேடியது. இஸபெல்லே கடந்த ஆறு மாதங்களாக அன்புவின் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாள்.அவள் அனைவருடனும் சகஜமாய் பேசுவாள் அவனுடனும் நன்றாக பேசுவாள்.இஸபெல்லே பொறுத்தமட்டில் மற்ற ஆண் நண்பர்களை போல் தானும் ஒரு நல்ல நண்பன் தான் என அன்புவிற்கு தெரியும் .ஆனால் அன்புவிற்கு இஸபெல்லே அப்படி இல்லை. அவளை கண்ட நாள் முதல் அவனுக்கு மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடுகிறது.அவனுக்கு இருக்கும் மூன்று பெண் நண்பர்களுள் அவளும் ஒருத்தி.மற்ற இருவரடித்தலும் வேலை, வாழ்க்கையை தவிர்த்து பெரிதாக எதுவும் பேசியதில்லை.ஆனால் இஸபெல்லேவிடம் தனது ஆண் நண்பர்களிடம் பேசுவதை போலவே(கெட்ட வார்த்தை,பெண்களை வர்ணிப்பது,ஆபாச படங்கள் தவிர்த்து) பேசுவான்.அவளிடம் வாட்ஸாப்ப்பில் பேசுவதே அவனுக்கு எளிதாக இருந்தது.அவளிடம் அருகில் நின்று பேசும் போது அவளது கண் முதற்கொண்டு அனைத்தும் அவனை தவிப்பிற்கு உள்ளாக்கியதால் எதை பார்த்து பேச வேண்டும் எதை பார்க்காமல் பேச வேண்டும் என்பதறியாமல் திணறுவான்.பள்ளி கல்லூரி நாட்களில் எந்த பெண்னிடமும் நட்போ காதலோ ஏற்படாததால் அவளை பார்த்தால்,அவளிடம் பேசினால் தனக்கு உண்டாகும் உணர்விற்கு பெயர் தெரியாமல் தவித்தான் அந்த இருபத்திநான்கு வயது இளைஞன்.
கடந்த ஒரு மாதமாக அவளை 'சைட் அடிக்கும்' நேரம் அவனை அரியமாலேயே அதிகமானது. அவளிடம் அருகில் நின்று பேசுவதை விட தூரத்தில் நின்று யாருக்கும் தெரியாமல் அவள் அழகை ரசிப்பதையே அவன் விரும்பினான். இதை பற்றி யாரிடமும் அவன் பகிர்ந்துகொள்ளவில்லை. ஒருநாள் தன் 'FIGHT CLUB’ குளியலறையில் தனது ‘TYLER DURDEN’கண்ணாடியுடன் பேச ஆரம்பித்தான்..
'ஒரு வேல இது லவ்ஓ..'
'சே சே அவ எவ்ளோ நாள் பிரச்சனைன்னு பொலம்பிற்கா உனக்கு தான் பீலே ஆவலியடா..பசங்களுக்கு அட்வைஸ் பண்ற மாறி தான அவளுக்கும் பண்ண..அவ கூட எத்தனை பசங்க பேசுறானுக சுத்தறானுக உனக்கு காண்டும் ஆனதிலேயே..'
... 'ஷ்ஷ்ஹ்சபா...'
'அவ கிட்ட நல்லா பேசி பழகி பாப்போம் அவளுக்கும் புடிச்சுருக்க மாறி தெரிஞ்சா..first ஒழுங்கா நல்லா பேசு அப்பறோம் பாப்போம்'
அவளிடம் நன்கு பேசி பழகவேண்டும் என்று முடிவு செய்து விட்டு உறங்க சென்றான். தூக்கம் வரவில்லை..எப்போதும் போல இதற்கு தீர்வான சுய இன்பத்துக்கு தயார் ஆனான் .
மறுநாள்(வெள்ளி) அலுவலகத்தில் ஓணம் திருநாளை ஒட்டி ஆண்கள் வேட்டியும் பெண்கள் புடவையும் அணிந்து வந்திருந்தார்கள். அன்பு மற்றும் சில ஆண்கள் மட்டும் எப்போதும் போல உடை அணிந்திருந்தார்கள்.இஸபெல்லே வெந்நிற கேரளத்து புடவை அணிந்திருந்தாள்.முன்பு எவ்ளோவோ உடை அணிந்து அவளை பார்த்திருந்தாலும் இன்று அவை யாவையும் விட அழகாக இருந்தாள். தேவதை போல் அன்புவின் கண்களுக்கு தெரிந்தாள்.தூரத்தில் மெய் மறந்து நின்று பார்த்து கொண்டிருந்த அன்புவிற்கு உலக அழகி இவள் தான் என தோன்றிற்று. அவனுக்கு அவளை தீண்ட வேண்டும் போல் தோன்றியது ஆனால் அவனுக்கு முன் காற்று முந்தி கொண்டது. புடவை சிறிது விலகி பௌர்ணமி நிலா போல் காட்சியளித்த அவளது மெல்லிய இடை அவனை பெருமூச்சு விட செய்தது.அவள் ஆடையை சரி செய்து விட்டு தன்னை நோக்கி வருவதை கூட உணர முடியாத அளவிற்கு உலகம் அவனுக்கு உறைந்து போய் இருந்தது. அவள் அவனிடம் எதோ பேசுவதை சில வினாடிகள் பிறகு உணர்ந்தான்.அவளிடம் நிறைய பேச முடிவெடுத்த அவனால் ஓர் இரு வார்த்தைகள் கூட கண்களை பார்த்து நிதானமாக பேச முடியவில்லை.அவளுடன் அருகில் நின்று பேசும்போது அந்த நெருக்கமும்,அவள் வாசமும் சிறு உரசல்களும் மேலும் அவனை கிறங்கடித்தது. அவனுள் ஏற்பட்ட ரசாயன மாற்றம் அவன் பிறப்புறுப்பிலும் வெளிப்படுவதை உணர்ந்தான்.அந்த இடத்தை விட்டு ஏதோ காரணம் சொல்லிவிட்டு கழிப்பறை நோக்கி நகர்ந்தான்.அவனுக்கு தான் தவறு செய்கிறோமா என்ற எண்ணம் வரத் துடங்கியது.தன் முகத்தை கழுவி கொண்டு தன்னிலைஉணர்த்தவனாய் அழுகவலகத்தில் இருந்து தனது விடுதிக்கு புறப்பட்டான். .
விடுதிக்கு வந்த பின்னர் இஸபெல்லே அவனை கைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் அவன் திடீரென்று அலுவலத்தை விட்டு கிளம்பினான் என்று விசாரித்தாள்,அவன் ஏதோ சொல்லி சமாளித்தான்,அவனை நாளை(சனி) அமித்தின் பார்ட்டிக்கு நேரமே வரும்படி வற்புறுத்திவிட்டு இணைப்பை துண்டித்தாள். இன்று நடந்த எதுவும் அவளுக்கு தெரியவில்லையா,தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறாளா என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அன்றிரவும் அவனுக்கு தூக்கம் வரவில்லை.துக்கத்திற்கும், தூக்கத்திற்கும் ஏக்கத்திற்கும் சுய இன்பமே அவனுக்கு மருந்து.வழக்கம் போல் தன் கைபேசியை எடுத்து கொண்டு குளியறைக்கு சென்றான்..ஆபாச படம் பார்த்து கொண்டே சுய இன்பத்தின் போது உச்சத்தை அடையும் தருணத்தில் கண்களை மூடினான். ஆபாச பட நாயகி கண்களுக்குள் தெரியாமல் இஸபெல்லே தெரிந்தாள்...அன்பு சுதாரித்து கொண்டு தனது பிறப்புறுப்பிலிருந்து கையை எடுத்தான்.தனது கைகளை கழுவிக்கொண்டு படுக்கை அறைக்கு சென்றான்.மணி நான்கு ஆனது அரைத்தூக்கத்தில் இருந்த அவனது கனவில் இஸபெல்லே அடைகளின்றி வந்தாள்.கனவில் அவள் உடல் முழுவதையும் கட்டி தழுவினான்,நிஜத்தில் அவனது போர்வையை பிசைந்து கொண்டிருந்தான்.அவன் உச்சம் அடைய இருந்த நேரத்தில்,திடீரென கனவில் இருப்பது இஸபெல்லேவுடன் என்பதை உணர்ந்து முழித்து கொண்டான்.சிறிது நேரம் எதையோ சிந்தித்து விட்டு தன் கையை பிறப்புறுப்பின் மேல் வைத்தான்.கண்களை மூடி இஸபெல்லேவை நினைத்து சுய இன்பம் கண்டான்.தனது போர்வையை துடைத்துவிட்டு கைகளை கழுவிவிட்டு தூங்க சென்றான். மணி ஐந்து ஆனது இன்னும் தூக்கம் வரவில்லை.எழுந்து குளியறைக்குள் சென்று சிறுநீர் கழித்து விட்டு, கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து ஏதும் பேசாமல் சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தான்.பக்கத்து கோவிலில் சாமி பாடல் ஒலிப்பதை கேட்டு நினைவுக்கு திரும்பி படுக்கை அறைக்கு சென்றான்.அவனை எதோ உறங்கவிடாமல் துரத்தியது.சிறிது நேரம் உக்காந்து யோசித்துவிட்டு தனது பர்ஸ் மற்றும் பைக் சாவியை எடுத்துக்கொண்டு விடுதியில் தனது பல்சர் நிறுத்த பட்டிருந்த இடத்திற்கு வந்தான். சாவி போடும் முன்னர் தனது பர்ஸ்ல் உள்ள பணத்தை எண்ணி பார்த்துவிட்டு பேருந்து நிறுத்துமிடம் நோக்கி நகர்ந்தான்.தனது கைபேசியை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு பல இடங்களுக்கு பேருந்தில் சென்றான். மதிய உணவை உண்ட பிறகு விடுதி வந்து சேர்ந்தான்.அசதியில் படுத்தவன் இரவு ஏழு மணிக்குத்தான் முழித்தான்.தனது கைபேசியை ஆன் செய்தான்.இஸபெல்லே அவனை அழைத்து அனைவரும் வந்துவிட்டதாகவும் அவனை சீக்கிரம் வரும்படி கூறினாள்.மூளை குற்ற உணர்ச்சியில் போக வேண்டாம் என கூறிய போதும் மனம் அவளை காணவேண்டும் என கட்டளையிட்டு அவனை குளிக்க செல்ல வைத்தது...
கடந்த ஆறு மாதங்களாக இஸபெல்லே தனது தினசரி வாழ்வின் பெரும்பகுதியை ஆக்ரமித்துள்ளாள் என்பதை உணர்த்தவனாய் ஒரு மூலையில் அமித்தின் பார்ட்டியில் அமர்ந்திருந்தவன் முன்னே கையில் மதுக்கோப்பையுடனும் கைத்தாங்களுக்கு இரு ஆண்களுடனும் வந்தாள் இஸபெல்லே. இவ்வளவு நாட்களாக ஆண்களுடன் அவளை நெருக்கமாய் பார்த்த போது ஏற்படாத பொறாமை இப்பொழுது அன்புவிற்கு ஏற்பட்டது.இன்று அவனுக்கு அவள் தேவதையாக தெரியவில்லை..மதுவின் மயக்கத்தில் அவள் இருந்தாளா இல்லை அரைகுறை ஆடைகள் அணிதுறந்தாளா இல்லை நேற்று அவன் கனவில் தீண்டிய இடங்களை இன்று நிஜத்தில் அவன் கண் முன் வேறு ஆண்கள் தீண்டியதாளா எதனால் என அவனுக்கு விளங்கவில்லை.என்னிடம் வா விளக்குகிறேன் என அவனை அழைத்தது வோட்கா.அருகில் இருந்த மது பாட்டிலை எடுத்து மடக் மடக் என முழு பாட்டிலையும் அருந்தினான், சித்தம் சிலிர்க்க தொடங்கியது.அன்புவின் அருகில் அறைபோதையில் வந்து அமர்ந்து இஸபெல்லே பேச தொடங்கினாள்.அவள் பேசும்போது எதை பார்ப்பதென்று தெரியாமல் இருந்தவனை மது வழிநடித்தியது.அவள் அங்கங்கள் ஒவொன்றாய் பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.அவனிடம் வித்யாசத்தை உணர்ந்த இஸபெல்லே,
'குடிச்சுருக்கியா’ என்றாள்.
அன்பு சிறு புன்னகையுடன் தலையை அசைத்தான் அவள் மேலும் பேச ஆரம்பிக்கையில் அன்பு குறுக்கிட்டான் 'உன்கூட கொஞ்சம் தனியா பேசணும்'
'என்ன பேசணும்'
'கூட்டமா இருக்கு வேற எங்கேயாச்சு போலாம்'
அன்புவின் கண்களை இரண்டு வினாடி பார்த்து விட்டு பக்கத்து அறைக்கு அவனை கையை பிடித்து அழைத்து சென்றாள்.
'என்ன இப்போ சொல்லு'
எதையோ சொல்ல வந்தவன்,திடீரென அவளை இருக்க கட்டி அணைத்தான்.இஸபெல்லே அவனது பிடியிலிருந்து விலக முயற்சித்தாள்.
'டேய் என்ன பண்ற..ச்ச்'
அவன் தனது தாடி முளைத்த கன்னத்தை அவளது மெல்லிய கன்னத்துடன் உரசினான்.சிறிது உதறல்களுக்கு பின்பு இஸபெல்லே விலக முயற்சிப்பதை நிப்பாட்டி கொன்டாள்.அவளும் அவனை அணைத்தாள்.இருவரும் கட்டி தழுவிக்கொண்டனர்.நேற்று இரவு கனவில் அவளை கட்டியணைத்து போல் இல்லை இக்கணம்.அன்புவிற்கு காமம் மட்டுமில்லாமல் வேறேதோ உணர்வு தோன்றியது.அதன் பெயர் காதல் என மண்டைக்குள் நண்பர் வோட்கா கூறினார்.மறுப்பேதும் தெரிவிக்காதவனாய் இஸபெல்லே காதருகே மெல்லிய குரலில்,
‘I LOVE YOU’ என்றான்.
பதில் என்ன சொல்கிறாள் என கேட்பதற்கு அவள் உடலை விட்டு சிறிது விலகி நின்றான்.இஸபெல்லே அவன் கண்களை பார்த்துதலையை சிறிது ஆட்டிக்கொண்டு உதட்டை பிதுக்கிக்கொண்டு புன்னகைத்தாள்.புன்னகைப்பதை சிறிது குறைத்துக்கொண்டு
‘I TOO..’என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவள் கன்னங்களை பற்றிக்கொண்டு இதழில் முத்தம் வைத்தான்.
அவளும் அவனது பின்னந்தலையை பற்றிக்கொண்டு அவன் இதழை சுவைத்தாள்.இருவரும் கண்கள் மூடி நான்கு உதடுகளால் பேசிக்கொண்டு இருந்தார்கள்.ஆதி மனிதர்கள் சக மனிதனுடன் பேச உதடுகள் உதவும் என்பதை முத்தமிட்டே உணர்ந்திருப்பார்கள் என்று அன்புவும் இஸபெல்லேவும் உணர்ந்தார்கள்.சிறிது வினாடிகள் கழித்து கண்களை திறந்து முத்தமிடுவதை நிறுத்தினான் அன்பு.இஸபெல்லேவும் கண்களை திறந்தாள்.
'இனிமே குடிக்காத ப்ளீஸ் ' என்றான்
அன்பு மெல்ல சிரித்துக்கொண்டே தலையை ஆட்டி 'நீயும்' என்றாள் இஸபெல்லே.
மீண்டும் கண்களை மெல்ல மூடிக்கொண்டே அன்புவின் இதழில் முத்தமிட முன்னேறினாள்.
அவளின் கன்னங்களை பற்றிக்கொண்டு அன்பு,
'எனக்கு இதான் 1st Kissuh ..ம்ம் உனக்கு..நீயாரையாச்சு இதுக்கு முன்னாடி..’ என கூறிக்கொண்டிருந்தவனை மெல்ல கண்களை திறந்து பார்த்தாள்.
அவன் கைகளை விளக்கி விட்டு குனிந்தவாறு மெல்ல பின்னே நகர்ந்தாள். தன் கண்களையும் தலையையும் ஒரு கணம் தேய்தாள்..
பிறகு இஸபெல்லே நிமிர்ந்து தெளிவான பார்வையுடன் அவனை பார்த்து ஏளனமாக வாய் விட்டு சிரித்து கொண்டே அறையை விட்டு வெளியேற முற்பட்டாள்.ஒன்றும் புரியாத அன்பு வேகமாக அவள் முன் வந்து அவளை மீண்டும் கட்டியணைத்தான்.
'ஏன் போற?..இப்போ என்ன தப்பா கேட்டுட்டேன்?..'
அவன் பிடியிலிருந்து தன்னை வேகமாக விடுவித்துக்கொண்டு,
'பளார்' என அவன் கன்னத்தில் அறைந்தால் இஸபெல்லே.
அடித்த அடியில் கன்னத்தில் கை வைத்து உறைந்து போயிருந்தான் அன்பு. அவனை பார்த்து மீண்டும் ஏளனமாக சிரித்துக்கொண்டு தலையை இடதும் வலதும் ஆட்டிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினாள் அவள்.
Comments
Post a Comment